நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு முத்தம் - இறுதியில் நடந்த சம்பவம்
பறந்து கொண்டிருந்த விமானத்தில், விமான பணிப்பெண்ணிடம் காதலை தெரிவித்த இளைஞர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
டெல்லி
வியட்நாம் நாட்டில் உள்ள ஹோசிமின் நகரில் இருந்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு 7:25 மணிக்கு விமானம் புறப்பட்டது. அதில் பயணித்த குர்மீத் சிங் என்பவர், விமானத்தில் உள்ள இளம் பணிப்பெண் ஒருவரை வெகு நேரமாக பார்த்து கொண்டே இருந்தார்.
பின்னர், அவரை அருகில் அழைத்துப் பேசத் தொடங்கியவர், சில பொருட்களை கேட்டுள்ளார். அந்த பணிப்பெண்ணும் அவர் கேட்ட பொருட்களை கொடுத்து பணிவிடை செய்துள்ளார். இதை சாதமாக கருதிய அந்த இளைஞர் தொடர்ந்து இதே போல் செய்துள்ளார்.
கைது
இந்த சூழலில் அந்த பெண்ணை அழைத்த இளைஞர் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பணிப்பெண் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். உடனே எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் கையை பற்றிய இளைஞர் எதிர்பாராத விதமாக முத்தமிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பணிப்பெண், அந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சக ஊழியர்களை அழைத்து நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளார். உடனே விமான கட்டுப்பாட்டு அறை மூலம் டெல்லி விமான நிலையத்தில் உள்ள காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், குர்மீத் சிங்கை விமான ஊழியர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விமானப் பணிப் பெண்ணிடம் புகாரைப் பெற்று, குர்மீத் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.