நடுவானில் எகிறிய விமான கூரை; பறந்த பணிப்பெண் - அலறிய பயணிகள், என்ன நடந்தது?
நடுவானில் பறந்த விமானத்தின் மேற்கூரை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போயிங் விமானம்
லோஹா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரட்டை எஞ்சின், 110 இருக்கைகள் கொண்ட போயிங் 737-200 என்ற வகை விமானம் ஒன்றில் 89 பயணிகளும் ஆறு பணியாளர்களும் இருந்துள்ளனர். அப்போது, விமானத்தின் மேற்கூரையின் ஒரு பெரிய பகுதி பறந்துவிட்டது. மேலும், விமான கேபின் அழுத்தத்தை இழந்தது.
தொடர்ந்து, விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த கிளாராபெல் லான்சிங் என்ற பெண் அப்படியே பறந்து போனார். இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.
அதிசயம் ஆனால் உண்மை!
இருந்தபோதிலும், விமானம் 24,000 அடியில் பறந்து கொண்டிருந்த நிலையில், பைடல் கஹுலுய் ஏர்போர்ட்டில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்த நிலையில், அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில், அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை. விமானத்தில் கட்டமைப்பில் ஏற்பட்ட தோல்வியும் திடீரென ஏற்பட்ட டிகம்ப்ரஷனும் தான் இந்த மோசமான விபத்திற்குக் காரணம் என்று அமெரிக்கத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்தது.
தங்கள் வாழ்நாளிலேயே இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை என நினைக்கும் அளவிலான இந்தச் சம்பவம் 1988ல் ஏப்ரல் மாதத்தொல் நடந்தது குறிப்பிடத்தக்கது. இது தற்போது கவனம் பெற்றுள்ளது.