நடுவானில் பறந்த ஹெலிகாப்டர் - ஏரியில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு..!

United States of America Accident Death
By Thahir Jul 22, 2023 07:13 AM GMT
Report

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 பேர் உயிரிழப்பு 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணமம்ட நார்த் சோல்ப் பகுதியில் 4 பயணிகளுடன் இன்று ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஹெலிகாப்டர் அலாஸ்கா ஏரிப்பகுதியில் பறந்து கொண்டிருந்தது.

A helicopter crashed into a lake

அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் எரிக்குள் விழுந்த ஹெலிகாப்டரில் வேறு யாரேனும் பயணித்தார்களா? விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.