விமானத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா? அருவருப்பான விஷயங்களை போட்டுடைத்த பணிப்பெண்!

United States of America Flight World
By Swetha May 06, 2024 10:34 AM GMT
Report

விமானத்துக்குள் நடக்கும் அருவருப்பான விஷயங்களை விமானப் பணிப்பெண் பகிர்ந்துகொண்டார்.

விமானம் 

விமானம் என்பது மிகவும் காஸ்டலியான மற்றும் சிறந்த பயணம் தான் நினைவிற்கு வரும். இதனால் தான் விமான நிலையமே நம்மை பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. வெறும் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து பார்த்தால் ஒரு சொகுசான பயணம் அமையக்கூடும் என்று தோன்றும்.

விமானத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா? அருவருப்பான விஷயங்களை போட்டுடைத்த பணிப்பெண்! | Air Hostess Shares Disgusting Things In Flight

ஆனால்,உண்மை கதை அதுவல்ல. இங்கும் மக்கள் தாகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அங்கு நடக்கும் சில சம்பவங்களை விமானப் பணிப்பெண் ஒருவர் தெரிவித்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் சொகுசு விமான நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஏர் ஹோஸ்டஸ், தனக்கு நடந்த நிலைமைகள் குறித்து விவரித்தார்.

ஏர் ஹோஸ்டஸ் மரிகா மிகுசோவா தனது ‘டைரி ஆஃப் எ ஃப்ளைட் அட்டெண்டன்ட்’ என்ற புத்தகத்தில் விமான பயணத்தில் நடந்த அருவருக்கத்தக்க சில விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.அதில், ஒருமுறை துருக்கி பயணத்தின் போது, ​​மூன்று பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றதாக அவர் கூறினார்.

உள்ளே கொட்டிய மழை..!! ஆனா பஸ்'ல இல்ல விமானத்தில் !! நம்பலனா வீடியோ பாருங்க

உள்ளே கொட்டிய மழை..!! ஆனா பஸ்'ல இல்ல விமானத்தில் !! நம்பலனா வீடியோ பாருங்க

பணிப்பெண்

அது விமானம் முழுவதும் சிந்திய நிலையில், துப்புரவு பணியாளர்களும் ​​முறையாக சுத்தம் செய்யாமல் குப்பையை போட்டு மூடி விட்டனர். அந்தக் காலத்திலும் அப்படித்தான் நடந்தது. சில நேரங்களில் மாதவிடாய் ரத்தம் இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதற்கு பதிலாக, ஒரு போர்வை அங்கு போடப்படும். ஏனெனில் முழுமையாக சுத்தம் செய்ய நேரமிருக்காது.

விமானத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா? அருவருப்பான விஷயங்களை போட்டுடைத்த பணிப்பெண்! | Air Hostess Shares Disgusting Things In Flight

தொடர்ந்து குறிப்பிட்ட மரிகா, ”இந்திய விமானங்களில் பயணிகள் தங்கள் கால்களைத் துடைக்க துண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒருமுறை ஒரு பயணி இதை விட அதிகமாக செய்தார். அவர் பயன்படுத்திய டவலைக் கேட்டதும், அவர் தர மறுத்து, அந்த டவலால் அக்குளை துடைக்க ஆரம்பித்தார். பின்னர் அந்த அசுத்தமான துண்டு என்னிடம் தரப்பட்டது.

நான் முதலில் வாங்க தயங்கினேன், பின்னர் அந்த டவலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தேன்.அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பயணிகள் அனைவரும் உணவு உண்ணும் போது, ​​ஒரு பெண் தனது குழந்தையின் டயப்பரை மாற்றத் தொடங்கினார். சிறிது நேரம் காத்திருக்கும்படி அவர்களுக்கு சைகை காட்டினேன்.

விமானத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா? அருவருப்பான விஷயங்களை போட்டுடைத்த பணிப்பெண்! | Air Hostess Shares Disgusting Things In Flight

ஒருவேளை மற்ற பயணிகளுக்கு அதில் பிரச்சனை இருக்கலாம். ஆனால் அந்த பெண், “பிரச்சனை இல்லை, என் வேலை முடிந்தது” என்றாள். அந்த டயப்பரை அந்த பெண் தனது இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு சென்றாள். சில நேரங்களில் பெற்றோர்கள் சீட் பாக்கெட்டில் அழுக்கு டயப்பர்களை  வைக்கிறார்கள். தங்களுடன் சக பயணிகள் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு இவ்வாறான விஷயங்களை அவர்கள் முற்றிலும் கைவிட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.