உள்ளே கொட்டிய மழை..!! ஆனா பஸ்'ல இல்ல விமானத்தில் !! நம்பலனா வீடியோ பாருங்க
ஏர் இந்தியா விமானத்தின் மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் கசிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
விமானத்தில் மழை
மழை என்றால் நீரான சாலைகள், பேருந்தில் வழியும் தண்ணீர் போன்றவையே நமக்கு பெரிதும் ஞாபகம் வரும். இது போன்ற வீடியோக்கள் மழை வந்தாலே ட்ரெண்டாகி விடும். அந்த வகையில் தற்போது புதிய வீடியோ ஒன்று இணைந்துள்ளது.
ஆனால், தற்போது பேருந்து தாண்டி விமானத்திலும் மழை நீர் கொட்டியுள்ள வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. விமானத்தின் மேல்நிலை மேல்நிலை அடுக்குகளின் வழியாக பயணிகளின் இருக்கைகள் மீது தண்ணீர் கொட்டியுள்ளது.
இணையத்தளத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் விமானத்தின் விவரங்களைச் சரிபார்க்க பகிரப்படவில்லை என்றாலும் அது. ஏர் இந்தியா விமானம் என்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திலிருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை நீர் கொட்டியுள்ளது.
Air India flight ????♂️??♂️pic.twitter.com/7dpgcSPI2g
— Farid Khan (@_FaridKhan) November 29, 2023
பலரும் இதனை பயணிகளின் பாதுகாப்பில் கட்டப்படும் அக்கறை இல்லாத்தனம் என கடமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். விரையும் பேருந்து என்றால் சரி விட்டுவிடலாம் ஆனால் பறக்கும் விமானத்திலும் மழை நீர் கொட்டியது கேள்வி கேட்கவேண்டிய விஷயமே என்றும் பலரும் கேள்விகளையும் தொடுத்து வருகின்றனர்.