அதிவேகத்தில் பரவும் தொற்றுநோய்; உலக நாடுகள் அச்சம் - அடுத்த தலைவலியா..

Cough United States of America China
By Sumathi Apr 12, 2024 07:05 AM GMT
Report

பல்வேறு நாடுகளில் கக்குவான் இருமல் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது.

கக்குவான் இருமல்

சீனாவில் வூப்பிங் (Whooping Cough) இருமல் எனப்படும் கக்குவான் இருமல் அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதனால் 13 பேர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pertusis Cough

தற்போது இது சீனாவில் மட்டுமல்லாது உலக அளவில் ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த இருமல் குழந்தைகளை பெரும்பாலும் தாக்குகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம்.

மக்களே உஷார்! இருமல் மருந்தால் சிறுநீரகம் பாதிப்பு - 133 குழந்தைகள் உயிரிழப்பு

மக்களே உஷார்! இருமல் மருந்தால் சிறுநீரகம் பாதிப்பு - 133 குழந்தைகள் உயிரிழப்பு

பரவும் அபாயம்

தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. இருமல் துவங்குவதற்கு முன், நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், 'ஆன்டிபயாடிக்' வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீனாவில் குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன.

அதிவேகத்தில் பரவும் தொற்றுநோய்; உலக நாடுகள் அச்சம் - அடுத்த தலைவலியா.. | Whooping Cough Spreading China Usa Symptoms

அமெரிக்காவில், 7 வயது வரையானவர்களுக்கு, 7 வயதுக்கு மேற்பட்டோருக்கு என தனித்தனியாக தடுப்பூசிகள் உள்ளன. மூச்சுக் குழாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருமல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.