சளி, இருமல், காய்ச்சலா? இந்த ஒரு செடியின் இலையே போதும்! தீராத சளியும் நொடியில் கரைத்துவிடும்

lifestyle-health
By Nandhini Aug 21, 2021 12:36 PM GMT
Report

கற்பூரவள்ளி இலையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். கற்பூரவள்ளி, ஓமவல்லி என்று அழைக்கப்படும் இந்த செடியானது பெருபாலான வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இது மூலிகை செடியாகும்.

மருத்துவ குணம் அதிகம் கொண்ட கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலைகளை பச்சையாக சாப்பிடுவதற்கு முன் அதனை நன்றாக கழுவிய பிறகு சாப்பிட வேண்டும். கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும். கற்பூரவள்ளியில் வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் கே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.

சளி, இருமல், காய்ச்சலா? இந்த ஒரு செடியின் இலையே போதும்! தீராத சளியும் நொடியில் கரைத்துவிடும் | Lifestyle Health

கற்பூரவள்ளி இலையின் எண்ணற்ற பயன்களைப் பற்றி பார்ப்போம் -

முதுமைத் தோற்றத்தை தடுக்க

கற்பூரவள்ளி முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு பல சரும நோய்களையும் எதிர்க்கும்.

படை, செரி, அரிப்புக்கு

நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, செரி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற் பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

உடல் கொழுப்பு கரைக்க

கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சளி

சளி, அடி வயிற்று வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்க

கற்பூரவள்ளி இலைகளில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

அஜீரண கோளாறுக்கு

நெஞ்சு சளி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு டம்ளர் நீரில் ற்பூரவள்ளி எண்ணெய் 3 துளிகள் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு 4-5 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது அஜீரண கோளாறுகளை சரி செய்யும்.

காய்ச்சல் சரியாக

கற்பூரவள்ளி இலைகளை கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும் நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும் ஜுரம் சீக்கிரம் நீங்கும்.