மக்களே உஷார்! இருமல் மருந்தால் சிறுநீரகம் பாதிப்பு - 133 குழந்தைகள் உயிரிழப்பு

Indonesia Death
By Sumathi Oct 22, 2022 11:13 AM GMT
Report

சிறுநீரக பாதிப்பினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 133ஆக அதிகரித்துள்ளது.

இருமல் மருந்து 

இந்தோனேசியாவில், இருமல் மருந்து உட்கொண்டதன் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டு, நடப்பாண்டு மட்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 99 குழந்தைகள் உயிரிழந்ததாக இந்தோனேசிய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

மக்களே உஷார்! இருமல் மருந்தால் சிறுநீரகம் பாதிப்பு - 133 குழந்தைகள் உயிரிழப்பு | Indonesia Bans Syrup Medicine Death 133 Children

குறிப்பிட்ட அந்த இருமல் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்ளூரில் தயாரானவையா எனத் தெளிவாகத் தெரியவில்லை. அந்நாட்டின் சுகாராதத்துறை தகவலின்படி, ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுநீரக பாதிப்பு

இவர்களுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் உறுதியானது. பதிவான எண்ணிக்கையை விட உயிரிழப்புகள் கூடுதலாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே,அனைத்து விதமான இருமல் மருந்துகள் மற்றும் திரவ மருந்துகளின் விற்பனைக்கும் இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில், தற்போது இந்தோனேசியாவிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

133 குழந்தைகள் பலி

காம்பிய நாட்டு மருந்துகளை ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்திய போது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக டை எத்திலீன் கிளைக்கால், மற்றும் எத்திலீன் கிளைக்கால் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, உலகம் சுகாதார அமைப்பு அக்டோபர் 5ம் தேதி இந்திய ஃபார்மா நிறுவனமான மெய்டன் ஃபார்மாசீயுடிகல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் ஜலதோஷத்துக்காக கொடுக்கப்படும் நான்கு வகை சிரப்-களையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.