அதிவேகத்தில் பரவும் தொற்றுநோய்; உலக நாடுகள் அச்சம் - அடுத்த தலைவலியா..
பல்வேறு நாடுகளில் கக்குவான் இருமல் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது.
கக்குவான் இருமல்
சீனாவில் வூப்பிங் (Whooping Cough) இருமல் எனப்படும் கக்குவான் இருமல் அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதனால் 13 பேர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இது சீனாவில் மட்டுமல்லாது உலக அளவில் ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த இருமல் குழந்தைகளை பெரும்பாலும் தாக்குகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம்.
பரவும் அபாயம்
தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. இருமல் துவங்குவதற்கு முன், நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், 'ஆன்டிபயாடிக்' வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீனாவில் குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன.
அமெரிக்காவில், 7 வயது வரையானவர்களுக்கு, 7 வயதுக்கு மேற்பட்டோருக்கு என தனித்தனியாக தடுப்பூசிகள் உள்ளன.
மூச்சுக் குழாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருமல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.