இந்த பிரச்சனைகள் இருந்தால் மறந்தும் கூட இளநீர் குடிக்காதீங்க - கவனம் தேவை!
தேங்காய் தண்ணீர் யார், ஏன் குடிக்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீரில் கலோரிகள் மிகவும் குறைவு. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
அதே சமயம் அது அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல. தேங்காய் தண்ணீரில் இயற்கையாகவே சர்க்கரை இருப்பதால் அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன.
யார் குடிக்கக்கூடாது?
அதனால் சர்க்கரை நோயாளிகள் தேங்காய் தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. வயிறு அல்லது எரிச்சல் கொண்ட குடல் பிரச்சனை (IBS) உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை குடித்த பிறகு வீக்கம் அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கலாம். சிலருக்கு தேங்காயால் அழற்சி ஏற்படலாம்.
அவர்களுக்கு அரிப்பு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். எனவே, அப்படிபட்டவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தானது. தேங்காய் நீர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், குடிப்பது நல்லதல்ல.
கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் தேங்காய் தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சி தரும். இது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆறு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தேங்காய் தண்ணீர் நல்லதல்ல.