சுகர் இருக்குறவங்க தேங்காய் சாப்பிடலாமா? இந்த மாவெல்லாம் சாப்பிடவே கூடாது!
நீரிழிவு நோயை எந்நேரமும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தேங்காய்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தேங்காயை சாப்பிடுவதால், சர்க்கரை அளவு கூடிவிடும் என்று நம்புகிறார்கள். ஆனால், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், இன்னும் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், இதை தவிர்க்கக்கூடாது என்கிறார்கள்.
அதனால், சர்க்கரை நோயாளிகள் தினமும் தேங்காய் சட்னி, தேங்காய் துவையல் போல எடுத்து கொள்ளாமல், துருவிப்போடும் பொரியல்களை சாப்பிடலாம். வெறும் தேங்காயை அதிக அளவில் அப்படியே சாப்பிட கூடாது. குறைந்த அளவில் இளநீரையும் சேர்த்து கொள்ளலாம்.
மாவு வகைகள்
மேலும், சர்க்கரை நோயாளிகள் கோதுமை அதிகமாக சாப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக, கோதுமையை நீங்களே மாவு அரைத்து சாப்பிடலாம். சோள ரொட்டி- சோளத்தில் நிறைய புரதம் உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சோள ரொட்டி சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோயாளிகளுக்கு அரிசி மாவு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் அரிசியை அதிகம் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை.