சுகர் இருப்பதை சிறுநீர் மூலம் எப்படி கண்டுபிடிப்பது? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
சர்க்கரை நோய்
உலகெங்கும் பல மனிதர்கள் நீரிழிவு நோயுடன் போராடி வருகின்றனர். வாழ்வின் அங்கமாக பார்க்குமளவுக்கு அதிகரித்து விட்டது. ரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸை நீரிழிவு உருவாக்குகிறது.
இது சிறுநீரகங்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கிறது. சிறுநீரகங்கள் இந்த குளுக்கோஸை வடிகட்ட போராடுவதால், அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது.
அடிக்கடி சிறுநீர்..
மேலும் உடலில் இருந்து திரவங்களையும் சிறுநீரகம் இழுத்துச் சேர்க்கிறது. இது வழக்கத்தைவிட அதிக தாகத்தை உணர வைக்கும் (பாலிடிப்சியா), இதனால் ஒருவர் அதிக திரவங்களை அருந்தி அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
ஆரோக்கியமாக இருக்கும் நபர் ஒருவர், நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கலாம். அதேபோல், சாதாரணமாக மனிதர்கள் 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளும் நிலையில், நீரிழிவு நோயாளிகள் 3 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்வார்கள்.
எனவே, தாகம் அதிகமாக ஏற்படுவதும், சிறுநீர் அதிகமாக கழித்தலும் நோயின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தங்கள் உடல்நிலையை பேணுவது சிறந்தது.