தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் உடம்பில் தேங்காய் எண்ணெய் தடவிப் படுத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்!
பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை.
தேங்காய் எண்ணெயைப் போன்று உடலுக்கு நன்மை செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை என்பதே அழகியல் நிபுணர்களின் கருத்தாகும். அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய்.
இந்த தேங்காய் எண்ணெய் சமையலில் மட்டுமின்றி, சரும பராமரிப்பிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இதைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
இரவில் தூங்கச் செல்லும் முன் தேங்காய் எண்ணெய் தடவிப் படுத்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
உடல் சூடு தணிய
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உறங்கினால், உடல் சூடு தணியும்.
பூஞ்சை தொற்று நீங்க
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி படுத்தால், தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லாரிக் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகத்தில் பூஞ்சை மற்றும் அழுக்கை நீக்கும். இந்த லாரிக் அமிலத்தின் ஆற்றல் இரவில் அதிகமாக இருப்பதால் இரவில் தேங்காய் எண்ணெயைப் தடவிக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
கண் வறட்சி நீங்க
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் தொப்புளில் தேங்காய் எண்ணெய் விட்டு தூங்கினால் கண் பார்வை தெளிவடையும். கம்ப்யூட்டர், மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகும். அவர்களுக்கு இந்த வைத்தியம் பலன் கொடுக்கும். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்தலாம்.
தோல் சுருக்கம் நீங்க
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி, மசாஜ் செய்து படுத்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கலாம்.
பருக்கள் நீங்க
தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், முகப்பருக்களைக் கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள பேட்டி அமிலங்கள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் எண்ணெய் பசை உற்பத்தியை அதிகரிக்காமல் தடுக்கும்.
பாதவெடிப்பு
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் பாதத்தில் தேங்காய் எண்ணெய் தடவி படுத்தால், பாதவெடிப்பு மிக விரைவில் சரியாகும்.
தழும்புகள் மறைய
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் கை, கால் மூட்டுகளில் தேங்காய் எண்ணெய் தடவி படுத்தால், கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் மிக விரைவில் மறைய ஆரம்பிக்கும்.