110 நாடுகளில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. WHO எச்சரிக்கை!
ஓமைக்ரான் தொற்று உருமாற்றத்தின் காரணமாக உலக அளவில் 110 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அதனால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான்.
இதற்கு அடுத்ததாக இந்தியா, பிரேசில்,,பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டன. உலக அளவில் இதுவரை 55.24 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு
இதேபோல் 63.57 லட்சம் பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகில் 52.77 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு மாறிக்கொண்டே இருந்தாலும் இன்னும் ஓயவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் தெரிவித்துள்ளார்.
110 நாடுகளில்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிதாக உருமாறும் தொற்றுகளை விரைவாக ஆய்வு செய்வது சற்றே கடினமாக உள்ளது.
எனவே, பெருந்தொற்று ஓய்ந்து விட்டது என நாம் இருந்துவிடக்கூடாது. A.4 மற்றும் BA.5 வகை கோவிட் தொற்றுகளால், சுமார் 110 நாடுகளில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக உலகளவில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்புகளும் மொத்தம் உள்ள ஆறு கண்டங்களில் மூன்று கண்டங்களில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனித குடலை சமைக்கச் சொல்லி சாப்பிட வைத்த கொடூரம்.. பெண் அலறல்!