ஓமைக்ரான் தொற்று பரவல் – டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று அனைத்து நாடுகளிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் கொரோனா வைரஸால் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தலைநகர் டெல்லியில் தான் அதிகமானோர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தப்பட்டுள்ளது.
இதன்படி கடைகள் வணிக வளாகங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.