மனித குடலை சமைக்கச் சொல்லி சாப்பிட வைத்த கொடூரம்.. பெண் அலறல்!
ஆளைக் கொன்று குடலை உருவி எடுத்து அதை குழம்பு வைத்து தரச் சொல்லி பெண்ணை சித்திரவதை செய்தவர்கள், சமைத்து தந்தை பெண்ணையே சாப்பிட வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
காங்கோ
இந்த கொடூரம் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடந்திருக்கிறது. காங்கோவில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்ற கிளர்ச்சியாளர்கள் அண்மையில் ஒருவரை கடத்திச் சென்று இருக்கிறார்கள்.
அவரை விடுவிக்க வேண்டும் என்றால் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் சொல்ல, அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவரை மீட்க சென்று இருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணை கிளர்ச்சியாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை
பின்னர் ஒரு ஆளை கொலை செய்து அவரின் குடலை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்து குழம்பு வைக்க சொல்லி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் மிரட்டலுக்கு பயந்து சமைத்து தந்திருக்கிறார்.
பின்னர் கட்டாயப்படுத்தி அந்த உணவை அந்த பெண்ணையே சாப்பிட வைத்திருக்கிறார்கள் . அந்தப் பெண் மட்டுமல்லாது அங்கே கடத்தி சிறை வைக்கப்பட்டிருந்தவர்களிடமும் கொடுத்து வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்திருக்கிறார்கள்.
கொடூரம்
இந்த சித்திரவதையிலிருந்து ஒரு வழியாக அந்தப் பெண் தப்பித்திருக்கிறார். ஆனால் திரும்பிச் செல்லும் வழியில் இன்னொரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து
அவர்களும் நர மாமிசம் சாப்பிட வைத்து சித்திர வதை செய்திருக்கிறார்கள். பின்னர் ஒரு வழியாக இந்த சித்திரவதையிலிருந்து அந்தப் பெண் தப்பித்து வந்திருக்கிறார்.
ஐநா
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச பெண்கள் உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜூலினா லூசெங்கே பேசிய போது இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விவரித்து இருக்கிறார்.
காங்கோவில் அமைதியை ஏற்படுத்தி அங்கள் மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இளம்பெண்ணை மது அருந்த வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாற்று திறனாளிகள்!