கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட பீர்.. அடேங்கப்பா! இவ்வளவு வரவேற்பா?

Singapore
By Sumathi Jul 01, 2022 04:34 PM GMT
Report

சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் மது பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பீர்

பொதுவாகவே பீர் தயாரிப்புக்கு அதிகளவு நீர் தேவைப்படுகிறது. ஏனெனில் உண்மையில் மற்ற மதுபானங்களைவிட பீரில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீரே உள்ளது.

beer

இந்நிலையில் சிங்கப்பூர் குடிநீர் வாரியம், ‘நியூ- ப்ரியுவ்’ என்கிற புதிய வகை பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பீரானது முழுவதுமாக கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

சிங்கப்பூர்

அதாவது கழிவு நீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து இந்த பீர் தயாரிக்கப்படுகிறது. முதலில் கழிவு நீர் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

singapore

முதலில் கழிவு நீரில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் அங்கி மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கப்பட்டு, வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாற்றப்படும்.

தண்ணீர் பிரச்சனை 

பின்னர் அந்த ‘நியூ - வாட்டர்’ எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரில் இருந்து இந்த பீர் தயாரிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக சிங்கப்பூரில் தண்ணீர் பிரச்சனை அதிகரித்துக் காணப்படுகிறது.

கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதால், அவற்றை நிவர்த்தி செய்ய அந்நாடு எடுத்துள்ள அக்கப்பூர்வமான வழிகளில் ஒன்று தான் இந்த கழிவுநீரில் பீர் தயாரிப்பதும்.

நியூ ப்ரியுவ் பீர் 

கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீரா என ஒரு பக்கம் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும், தற்போது சிங்கப்பூர் முழுவதுமே இந்த நியூ ப்ரியுவ் பீர் குறித்த பேச்சே அடிபடுகிறது.

முதலில் இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் இருந்தது.. ஆனால் எதிர்பார்த்ததை விட இந்த பீருக்கு மதுப்பிரியர்களிடையே கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து விஷால் போட்டி? வெளியான தகவல்!