இந்தியா கூட்டணியில் பிரதமர் யார் என்பது 24 மணி நேரத்தில் தெரியும் - ப சிதம்பரம் உறுதி
இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசி உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தல்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (1 ஜூன் 2024) நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்பதே முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா கூட்டணினியின் பிரதமர் வேட்பளார் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது, நான் கடவுளை நம்புகிறவன் ஆனால் தியானம் செய்யும் அளவுக்கு எனக்கு ஆன்மீக முதிர்ச்சி இல்லை. தியானம் செய்யபவர்கள் தாராளமாக செய்யலாம். அது பற்றி எங்களுக்கு விமர்சனம் இல்லை. ஆனால் கேமிராவுக்கு முன்னாள் ஏன் அதை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கேள்வி.
ஏப்ரல் 20 வரை ஒரு மாதிரி பேசிய மோடி, 21 க்கு பிறகு வேற மாதிரி அப்படியே அனைத்தையும் மாற்றி பேசுகிறார். ராமர் கோவிலை இடித்து விடுவார்கள், தாலியை பறிப்பார்கள் என பேசி வருகிறார்.
முஸ்லீம் லீக் வரலாறு
எங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாததை எல்லாம் பிரதமர் மோடி சொல்கிறார். முஸ்லீம் லீக் கட்சியின் தேர்தல் அறிக்கை சாயலில் எங்கள் தேர்தல் அறிக்கை உள்ளது என்கிறார். முஸ்லீம் லீக் தீண்டாத்தகாத கட்சி இல்லை . முஸ்லீம் லீக் வரலாறு அவருக்கு தெரியாது.
சுதந்திரத்துக்காக தொடங்கப்பட்டு, இந்து மகா சபையுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தது வரலாறு. இந்திய ராணுவம், கிரிக்கெட். பாலிவுட்டில் எத்தனையோ முஸ்லிம்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் பிரதமர் பேச்சை கேட்டு புண்பட மாட்டார்களா? இவர்கள் இந்தியர் இல்லையா?. என பேசினார்.
வெற்றி வாய்ப்பு
மேலும், தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கனா, கர்நாடகாவில் காங்கிரஸ் நல்ல வெற்றி பெறும். ஆந்திராவில் மட்டும் வெற்றி வாய்ப்பு குறைவு. வடஇந்தியாவில் என்ன நிலவரம் என்பது எனக்கு தெரியவில்லை. அங்கு காங்கிரஸ்க்கு நல்ல சூழல் நிலவுவதாக அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் கணித்து சொல்கிறார்கள்.
இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் யார் பிரதமர் என்பதை 24 மணி நேரத்தில் அறிவித்து விடுவோம் அதில் எந்த சிக்கலும் இருக்காது என பேசியுள்ளார்.