Wednesday, May 14, 2025

பக்கோடா, பஜ்ஜி போடுவதுலாம் வேலைவாய்ப்பு இல்ல - ப.சிதம்பரம்

Indian National Congress BJP India P. Chidambaram
By Sumathi 3 years ago
Report

பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு கிடையாது எனவும், உண்மையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 ப.சிதம்பரம்

காங்கிரஸ் பொருளாதார மாடல் எனும் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சரும் ஆன ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

பக்கோடா, பஜ்ஜி போடுவதுலாம் வேலைவாய்ப்பு இல்ல - ப.சிதம்பரம் | P Chidambaram Critizise Bjp Govt

விழாவில் உரையாற்றி ப.சிதம்பரம் கூறியதாவது: 31 வருடங்களாக இந்தியா உலகளாவிய பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. 1991லிருந்து இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக வளர்ந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி

2004 லிருந்து 4 முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றமடைந்துள்ளது. 7.5 சதவீதத்தில் இருந்து 9 சதவீதம் என மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது. 230 மில்லியன் மக்கள் முன்னேற்றம் அடைந்தனர்.

நமது மக்கள் தொகையில் 50 % க்கும் மேற்பட்டவர்கள் 25 வயதுக்கும் கீழ் உள்ள இளைஞர்கள் தான். தற்போது நாட்டின் பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.

 வேலை வாய்ப்பு

இந்த 31 வருடம் பொருளாதாரம் பற்றி பல அனுபவங்களை நமக்கு கொடுத்துள்ளது. பிராந்தியங்களுக்கு இடையே வேறுபட்ட பொருளாதாரம் நிலவுகிறது .எங்களுடைய முக்கிய இலக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம். பசியால் வாடுபவர் நாடுகளின் பட்டியலில் இந்தியா 140 நாடுகளில் 101 வது இடத்தில் உள்ளது.

 இலக்கு

8.72 லட்சம் இடங்கள் மத்திய அரசு பணிகள் காலியாக உள்ளது. ஆனால் 10 லட்சம் பணி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை உள்ளது.

காங்கிரஸால் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். எங்களுடைய முக்கிய இலக்கு இது தான். இவ்வாறு கூறினார். 

அழுத்தம் கொடுத்தாங்க...ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி