பரபரப்பான காங்கிரஸ் போராட்டம் : எம்பி ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை
ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக அழைப்புவிடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஜோதிமணி எம்பியை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
மூன்றாவது நாளாக விசாரணை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் தொடர்ந்து 2 நாட்ளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை நேற்று இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. 2-வது நாளான நேற்று 8½ மணி நேரம் விசாரணை நடந்த்தாக கூறப்படுகிறது.
தற்போது மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகிரார். கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி 18 மணி நேரத்திற்கு மேலாக விசாரணையில்விளக்கமளித்த நிலையில் இன்றும் ஆஜராகி ராகுல் காந்தி விளக்கம் அளிக்க உள்ளார்
ஜோதிமணி கைது
இந்தநிலையில் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்தி புறப்பட்ட போது, காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் மகளிர் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுமட்டுமின்றி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது சென்றனர். அவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்ட நிலையிலும், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன
சீமானை கைது செய்ய வேண்டும்... அவர் பாஜக ஆளு! ஜோதிமணி வெளியிட்ட வீடியோ