அதிகம் அசைவம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா? தமிழகத்திற்கு எந்த இடம்!
இந்தியாவில் அதிகம் அசைவம் சாப்பிடும் மாநிலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அசைவ விரும்பிகள்
இந்தியாவில் மீன், இறைச்சிகள் போன்றவற்றை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவத்தை விரும்பி. உண்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் படி, அதிக இறைச்சி உட்கொள்ளும் மாநிலமாக நாகலாந்து உள்ளது. அங்கு 99.8 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகின்றனர்.
மாநில பட்டியல்
மேற்கு வங்கம் 2வது இடத்தில் உள்ளது. 99.3 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள். கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. 99.1 சதவீதம் பேர் அசைவத்தை விரும்புகின்றனர்.
தெலுங்கு மாநிலமான ஆந்திரா நான்காவது இடத்தில் உள்ளது. 98.25 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர்.
தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு 97.65 சதவீதம் பேர் அசைவத்தை விடும்பி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.