உலகில் அதிக இறைச்சி உணவை உண்ணும் நாடுகள் லிஸ்ட் - இந்தியாவில் எப்படி?
உலகில் அதிகம் இறைச்சி உன்னும் நாடுகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் காணலாம்.
இறைச்சி உணவு
இன்றைய காலகட்டத்தில் இறைச்சி உணவை உண்ண விரும்புவார்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு சிலர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும், ஒரு சிலர் விலங்குகளை துன்புறுத்தகூடாது போன்ற காரணங்களால் இந்த முடிவை எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து சில நாட்களாக உலகம் முழுவதும் இறைச்சி உண்பதைக் குறைக்க கோரி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரத்தில் ஒரு நாளை அசைவம் இல்லாத நாளாக பலர் பின்பற்றி வருகின்றனர். குறைந்தது ஒரு நாளில் மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், ஒரு பக்கம் அசைவ விரும்பிகளின் எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கிறது.
இந்தியாவின் இடம்
உலகில் எந்த நாடு அதிகம் இறைச்சி சாப்பிடுகிறது என்ற பட்டியலில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக நியூசிலாந்தும் அர்ஜென்டினாவும் உள்ளன.
இந்த இரு நாட்டில் இருக்கும் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 100 கிலோ அசைவம் சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் ஆண்டுக்கு 80-90 கிலோ வரையில் அசைவம் எடுத்துக்கொள்வதாக தெரிகிறது.
ஆனால், இதற்கு முரணாக ஏழைநாடுகளில் மக்கள் மிகவும் குறைவாக இறைச்சியை உட்கொள்கின்றனர். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அசைவம் இன்னும் ஆடம்பரம் என்பதால் எத்தியோப்பியா, ருவாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளில் சராசரியாக 7-9 கிலோ வரை மட்டுமே மக்கள் இறைச்சியை உட்கொள்கின்றனர்.
நடுத்தர வருமான பெரும் நாடுகளில் அசைவம் உண்ணுவது மும்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், கலாச்சார காரணங்களால் இந்தியாவில் மட்டுமே ஒரு நபர் சுமார் 4 கிலோவுக்கும் குறைவாக அசைவம் சாப்பிட்டுவதாக தெரியவந்துள்ளது.