ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா - மதுரையில் வினோதம்!

Madurai Festival
By Sumathi Jun 04, 2022 12:00 PM GMT
Report

மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரம்மாண்ட அசைவத் திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், செக்கானூரணி, சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். இந்த விழாவில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா - மதுரையில் வினோதம்! | Nonveg Festival In Madurai Attended Only By Men

வாழை இலையில் கறிவிருந்து:

இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை தொடங்கியது. கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டன. 250 மூடை அரிசியை பயன்படுத்தி சாதம் சமைக்கப்பட்டது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா - மதுரையில் வினோதம்! | Nonveg Festival In Madurai Attended Only By Men

பெண்களுக்கு அனுமதியில்லை:

இந்த கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதம், ஆட்டுக்கறி குழம்புடன் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.

ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவார்கள். இந்த கறி விருந்தில் திருமங்கலம், சொரிக்கம்பட்டி பெருமாள்கோவில்பட்டி, குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.