Non Veg டெலிவரி செய்யக்கூடாது - பாஜக ஆளும் மாநிலங்களில் திணறிய சோமாட்டோ!
சோமேட்டோ நிறுவனத்திற்கு வைத்த கோரிக்கை ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சோமாட்டோ
அயோத்தி, ராமர் கோயில் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அயோத்தி ராமரைக் காண பக்தர்கள் காலை முதல் குவிந்து வருகின்றனர்.
தினமும் 5 லட்சம் வரை 2 வாரங்களுக்குப் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக ஆளும் 5 மாநிலங்களுக்கு ( அசாம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ) ”அசைவ உணவுகளை டெலிவரி செய்ய வேண்டாம்" என சோமேட்டோவிற்கு கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கோரிக்கை
இதனை சோமேட்டோ நிறுவனமும் ஏற்றுக்கொண்டது. மேலும், இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் Zomato Care எனும் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஹாய், அரசு வழங்கிய நோட்டீஸ் அடிப்படையில் உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரி செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம்.
இந்த அறிவிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அசைவ உணவு டெலிவரி செய்வதையும் நிறுத்தியது. இந்த நடவடிக்கைக்கு சில தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட நம்மிடம் இல்லையா என விமர்சித்து வருகின்றனர்.
Hi, we have disabled delivery of non-veg items in Uttar Pradesh, Assam, Chhattisgarh, Madhya Pradesh and Rajasthan as per govt. notice. Hope this clarification helps!
— zomato care (@zomatocare) January 22, 2024