ஸ்விகி, சோமேட்டோ, உபேர், ஓலா ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

M K Stalin Swiggy Zomato
By Vinothini Aug 15, 2023 05:16 AM GMT
Report

 முதல்வர் ஸ்டாலின் இன்று ஸ்விகி, சோமேட்டோ, உபேர், ஓலா ஊழியர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளார். 

சுதந்திர தினம்

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

stalin-says-to-set-up-welfare-board-for-swiggy

அதன் பிறகு காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

குட் நியூஸ்

இந்நிலையில், அவர் கொடியேற்றத்திற்கு பின்னர் பேசுகையில், "சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி,சோமோட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.

stalin-says-to-set-up-welfare-board-for-swiggy

நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன்" என்று கூறினார்.