கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழா - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

M K Stalin Karnataka
By Thahir May 20, 2023 02:21 AM GMT
Report

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். முதல்வர்கள் மம்தா பானர்ஜி மற்றும் ரங்கசாமி விழாவுக்கு வரவில்லை.

பதவியேற்பு விழா

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி, புதிய முதல்வராக சித்தராமையாவை அறிவித்துள்ளது.

இதன் மூலம் 2வவது முறையாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் சித்தராமையா. இந்த பதவியேற்பு விழா இன்று மாலை பெங்களூருவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதனை நாளுமன்ற கூட்டணி தொடக்கமாகவும் அமைக்க திட்டமிட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Inauguration ceremony of Chief Minister

இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டு சென்றார். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விழாவுக்கு

வரவில்லை எனவும் அவர் கட்சி சார்பாக முக்கிய தலைவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த விழாவுக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.