மார்கழி மாத கடும் குளிரில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?
குளிர்காலத்தில் நோய்கள் பரவும் விகிதம் அதிகம். எனவே இந்த நோய்களிலிருந்து தப்பிக்க நமக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். ( குறிப்பு : இந்த உணவுகளை எடுக்கும் முன்பு ஊட்டசத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்)
உங்கள் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் இரண்டும் உணவில் இருப்பது உண்மை தான். எனவே தான் மாறி வரும் பருவ காலங்களுக்கு ஏற்ப உணவை தேர்ந்தெடுப்பது அவசியம்.
குளிர்காலத்தில் ஏற்படும் சலதோஷம், இருமல் போன்ற சுவாச பிரச்சினைகளை போக்கும் சில உணவு வகைகள் உள்ளன. சரி வாங்க குளிர்காலத்தில் சேர்க்க வேண்டிய உணவுகளை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
சேணைக் கிழங்கு அல்லது வேர் வகை காய்கறிகள் :
[
இந்த ப்ரீபயோடிக் காய்கறிகள் எடை இழப்புக்கு உதவுகிறது. இது சீரண சக்தியை மேம்படுத்துகிறது. ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைக்கிறது. உருளைக்கிழங்கு டிக்கிஸ், சப்ஸிஸ், உந்தியோ போன்ற சிறப்பு உணவுகளை உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.
எள் விதைகள் :
[
எள் விதைகளில் கொழுப்பு அமிலங்கள், விட்டமின் ஈ போன்ற பலவகை சத்துக்கள் உள்ளன. இது எலும்பு, சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது. இதைக் கொண்டு சிக்கி, லட்டு, சட்னி மற்றும் தாளித்தல் போன்ற முறைகளில் பயன்படுத்தி வரலாம்.
வேர்க்கடலை :
வேர்க்கடலையில் விட்டமின் பி, அமினோ அமிலங்கள், பாலிபினால்கள் போன்றவை உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. நன்றாக வேக வைத்து அல்லது வறுத்து இந்த வேர்க்கடலையை சாப்பிட்டு வரலாம்.
சட்னி, சாலட், சப்ஸிஸ் போன்றவற்றில் இதை பயன்படுத்தலாம். கொள்ளுப்பயறு சிறுநீரக கற்களைத் தடுக்கிறது, வீக்கத்தை குறைக்கிறது. நல்ல புரத ஆதாரமாகும். நார்ச்சத்துக்கள் மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன.
இதை நீங்கள் பராத்தா, சூப், பருப்பு, சட்னி போன்றவற்றில் சமைத்து சாப்பிடலாம்.
பச்சை காய்கறிகள் :
நம் அன்றாட உணவில், பச்சை காய்கறிகளைச் சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகவும். பச்சை காய்கறிகள் ஆனது, அழற்சி எதிர்ப்பு (ஆன்டி இன்ஃபிளாமேட்டரி) பண்புகளைக் கொண்டுள்ளது.
கைகளிலும் கால்களிலும் ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவுகிறது. புற்றுநோயைத் தடுக்கக் கூடிய சிறந்த உணவுகளில் ஒன்றாக இந்த பச்சை காய்கறிகள் உள்ளது. பச்சை காய்கறிகளில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக காணப்படுகிறது.
கருணை கிழங்கு (குறிப்பாக, ஊதா நிற கருணை கிழங்கு), நூக்கல், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், சக்கரவள்ளி கிழங்கு போன்ற வேர் உள்ள காய்கறிகளை நீங்கள் உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும்.
வேர் உள்ள கிழங்கு வகைகளை வேகவைத்து, அதில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணையில் வருத்து கூட சாப்பிடலாம் - சக்கரவல்லி கிழங்கை வேகவைத்து அப்படியே சாப்பிடலாம்.