எங்கே பழனிசாமி? நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது - ஆவேசமான அமைச்சர் ரகுபதி!

Amit Shah DMK Edappadi K. Palaniswami
By Vidhya Senthil Dec 19, 2024 11:30 AM GMT
Report

 அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித் ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கும் நிலையில் பழனிசாமி எங்கே என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 எங்கே பழனிசாமி?

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “எங்கே பழனிசாமி? அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித் ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது.

முதல்வர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பழனிசாமி vs அமைச்சர் ரகுபதி

அதன்படி தமிழகம் முழுக்க திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள்.

அம்பேத்கரின் மறு உருவம் தான் கலைஞர்.. போஸ் கொடுத்தா மட்டும் போதுமா? விஜயை சீண்டிய அமைச்சர்!

அம்பேத்கரின் மறு உருவம் தான் கலைஞர்.. போஸ் கொடுத்தா மட்டும் போதுமா? விஜயை சீண்டிய அமைச்சர்!

சட்டமேதை, சமத்துவப் போராளி அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார்.

அமைச்சர் ரகுபதி

மத்திய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி,

அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் ‘வலிக்காமல் வலியுறுத்த’ கூட மனமில்லாமல் அமைதி…அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.

பழனிசாமி vs அமைச்சர் ரகுபதி

 யார் கண்ணிலும் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா? என்று.” என்று அவர் கூறியுள்ளார்.