அம்பேத்கரின் மறு உருவம் தான் கலைஞர்.. போஸ் கொடுத்தா மட்டும் போதுமா? விஜயை சீண்டிய அமைச்சர்!
அம்பேத்கரின் மறு உருவம் தான் கலைஞர் என திமுக அமைச்சர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்பேத்கர்
சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூரில் திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர், நடிகர் விஜய், நாம் தமிழர் சீமான் அவர்களால் உரசிப் பார்க்க முடியாதது தான் திமுக எஃகு கோட்டை.
தந்தை பெரியார் பெரும் நெருப்பு, பேரறிஞர் அண்ணா அன்பு கடல் கலைஞர் ஆற்றல் மிக்க தலைவர், தளபதியின் அயராத உழைப்பு என ஒட்டுமொத்த வடிவம் தான் உதயநிதி என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ,’’ ஒரு நாளைக்கு அம்பேத்கர் படத்திற்கு பூ வைத்து விட்டால் விஜய் என்ன வாழும் அம்பேத்கரா என்று கேள்வி எழுப்பினார்.
விஜய்
அம்பேத்கர் படத்துடன் போஸ் கொடுத்தால் மட்டும் போதுமா? அம்பேத்கரின் படத்தை ஒரு ரூபாய் நாணயத்தில் பதிக்க வைத்தவர் தலைவர் கலைஞர் தான் என்று கூறினார்.
பெரியார் ஆட்சிக் காலத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் வரை சனாதனத்தை எதிர்த்து வருபவர். மேலும் அம்பேத்கரின் மறு உருவம் தான் கலைஞர் இருப்பதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.