துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மீண்டும் புதிய பொறுப்பு - முதல்வர் உத்தரவு!
மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத்தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திட்டக் குழு
தமிழ்நாடு மாநில திட்டக் குழு 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் தொடர்ந்து இயங்கி வருகின்றது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு முழுமையான வளர்ச்சியை எய்துவதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குகின்ற ஓர் உயர் ஆலோசனை அமைப்பாக செயல்படுகிறது.
தமிழ்நாட்டின் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, சமூக நலன் மற்றும் புத்தாக்கம் ஆகியன தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் அரசுக்கு உதவுகிறது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஆய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் வாயிலாக திட்டங்களின் கடைகோடி மக்களையும் சென்றடைவதில் உள்ள தடைகள் மற்றும் சவால்களை இனம் கண்டு பொதுசேவை வாயிலாக திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய உதவுகிறது.
உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், எம்.விஜயபாஸ்கர், பகுதிநேர உறுப்பினர்களாக சுல்தான் அகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு மாநில திட்டக்குழுவுக்கு கூடுதலாக இருவரை நியமித்துள்ளது. அதாவது, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையி்ன் அமைச்சர் என்ற முறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அலுவல்சாரா துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.