விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

M K Stalin Tamil nadu Chennai Cyclone Fengal
By Karthikraja Dec 04, 2024 07:30 PM GMT
Report

மழை வெள்ளத்தில் சென்னையை மீட்டெடுத்தது போல் மற்றப் பகுதிகளையும் மீட்டு எடுப்போம் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

சென்னையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 29 முடிவுற்றப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

mk stalin

அதன் பின்னர் பேசிய அவர், "காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் பார்க்க துவங்கி உள்ளோம். வானிலை மையத்தின் கணிப்புகளை விட அதிக மழை கொட்டித் தீர்த்தது. 

ஃபெஞ்சல் புயல் - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி பேசியது என்ன?

ஃபெஞ்சல் புயல் - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி பேசியது என்ன?

காலநிலை மாற்றம்

தமிழகத்தில் மட்டுமல்ல உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனால் உண்டான தாக்கங்களை பார்த்து வருகிறோம். அரசு அலட்சியமாக இல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்பு பெரியளவில் ஏற்படவில்லை.

பெஞ்சல் புயலால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. கடந்த காலங்களில் மழை வெள்ளத்தில் தவிக்கக்கூடிய சென்னையை மீட்டெடுத்த மாதிரி மற்றப் பகுதிகளையும் விரைவாக மீட்டு எடுப்போம். 

mk stalin

2015 ஆம் ஆண்டு செயற்கை வெள்ளத்திலும், பல்வேறு புயல்களிலும் சென்னையை வெள்ளத்தில் மிதக்கவிட்ட மாதிரி நாம் இப்பொழுது தவிக்க விடவில்லை. முன்பெல்லாம் சென்னையில் மழை பெய்தால் சமூக வலைத்தளங்களில் உதவி கேட்டு அல்லாடுகின்ற நிலை இருந்தது.

விடியா மூஞ்சிகளுக்கு விடியாது

ஆட்சியாளர்களை களத்தில் பார்க்கவே முடியாது. அப்படியே வந்தாலும் என்ன பிரச்சனை என்று தெரியாமல் 'வாக்காளர் பெருமக்களே' என பேசுவார்கள். கடந்த கால ஆட்சி அப்படித்தான் இருந்தது. உதவி செய்ய வந்த தன்னார்வலர்களை மிரட்டுவார்கள். அவர்கள் வழங்கக்கூடிய நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கரை ஒட்டுவார்கள்.

அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் சென்னையில் மழை பொழிந்த அடுத்த நாளே மீண்டிருக்கிறது. விடியலை தருவது தான் உதயசூரியன். ஆனால் உதயசூரியினால் கண் கூசுகின்ற ஆட்களுக்கு விடியல் தெரியாது. 

mk stalin

விடியலை விடியா ஆட்சி என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளிய அந்த விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது. அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை.

எதிர்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சல்

புகார் கொடுப்பவர்களுக்கும், நம்மைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கும் நாம் பணிகளை செய்வோம். ஓட்டு போட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல ஓட்டு போட மறந்தவர்களுக்கும் நன்மை செய்வோம். மக்கலின் பாராட்டு எதிர்கட்சிகளை வயிறெரிய வைத்திருக்கிறது.

எவ்வளவு மழை பெய்தாலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என எல்லோரும் களத்தில் நின்று நிவாரண உதவிகளை செய்கிறார்கள். நம்மால் அரசியல் செய்ய முடியவில்லையே என தவிக்கிறார்கள்" என பேசினார்.