ஃபெஞ்சல் புயல் - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி பேசியது என்ன?

M K Stalin Tamil nadu Narendra Modi Cyclone
By Karthikraja Dec 03, 2024 06:30 AM GMT
Report

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஃபெஞ்சல் புயல்

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்தது. 

fengal cyclone damage

இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்களை படகு மூலம் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

மோடி - மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் நிவாரண பணிகளுக்கு பேரிடர் மீட்பு நிதியில் இருந்து மத்திய அரசு ரூ.2000 கோடி வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து வெள்ளப்பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். 

pm modi with mk stalin

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "“தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்புகொண்டு கேட்டறிந்தார். 

மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.