இனி இதை பதிவு செய்யாம வாட்ஸ்ஆப் யூஸ் பண்ன முடியாது - முக்கிய வசதி!
வாட்ஸ்ஆப்-ல் முக்கிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப் தொடர்ந்து அதன் அப்ளிகேஷனில் உள்ள சாட்டுகள், இமேஜ்கள், வீடியோக்கள் மற்றும் பிற வகையான தகவல்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் பயனர்கள் தங்கள் செயலி பயன்படுத்தும் முன் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இது தற்போது சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது.
முக்கிய வசதி
அதன்படி, தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் இது தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று கேட்கும் பாப்-அப் மெசேஜ் செயலியில் காண்பிக்கும். நீங்கள் சரியான வயதை உள்ளிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏனெனில் அந்தத் தரவை மீண்டும் திருத்தவோ மாற்றவோ முடியாது. இந்த தரவுகள் எதுவும் யாருக்கும் காண்பிக்கப்படாது. . பயனர்களின் தனியுரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி விரைவில் அனைத்து நாடுகளிலும் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.