அதற்கு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் - வாட்ஸ்அப் உறுதி

WhatsApp Delhi India Meta
By Sumathi Apr 26, 2024 10:28 AM GMT
Report

என்கிரிப்ஷனை கட்டாயம் ஆக்கினால் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்

2021ம் ஆண்டு மத்திய அரசால் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள்-2021’ கொண்டுவரப்பட்டது.

whatsapp

அதன்படி, சமூக வலைதள நிறுவனங்கள் அவர்களின் பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்குமாறும், அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய அரசின் புதிய விதிகள் கூறுவதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இதுகுறித்து மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தேஜஸ் கரியா என்பவர்,

இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம்- போட்டோ, வீடியோவும் அனுப்பலாம்..

இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம்- போட்டோ, வீடியோவும் அனுப்பலாம்..

என்கிரிப்ஷன்

“வாட்ஸ்அப்பின் பிரைவசி அம்சத்துக்காக தான் இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption) இருப்பதால், அதாவது வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியவரும், அதை பெறுபவரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை பார்க்க முடியும்.

அதற்கு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் - வாட்ஸ்அப் உறுதி | Whatsapp Will Exit India If Break Encryption

எனவே, எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்றுத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசு வழக்கறிஞர் “இன்றைய காலகட்டத்துக்கு இத்தகைய செயல்முறையும் சட்டமும் அவசியம்” என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.