வாட்ஸ்அப் சாட்ஸ்களை பாதுகாக்கனுமா - மறக்காம இதை பண்ணிருங்க..

WhatsApp
By Sumathi May 06, 2024 08:01 AM GMT
Report

வாட்ஸ்அப் சாட்களை பாதுகாக்க பண்ணவேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் தொடர்ந்து அதன் அப்ளிகேஷனில் உள்ள சாட்டுகள், இமேஜ்கள், வீடியோக்கள் மற்றும் பிற வகையான தகவல்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. நமது தகவல்களை நாமும் பாதுக்காக்க முயற்சிப்பது அவசியம்.

whatsapp chat lock

அதன்படி சில தகவல்களை பார்க்கலாம்.

இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம்- போட்டோ, வீடியோவும் அனுப்பலாம்..

இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம்- போட்டோ, வீடியோவும் அனுப்பலாம்..

பாதுகாப்பு அம்சங்கள்

தங்களுடைய சாட்டுகளில் எண்டு டு எண்ட் என்க்கிரிப்ஷனை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும். இதன்படி, வாட்ஸ்அப் அப்ளிகேஷன் கூட உங்களுடைய சாட்டுகளை அணுகுவதற்கான அனுமதியை பெற மாட்டார்கள்.

disappearing messages

ஒரு குறிப்பிட்ட சாட்டை தேர்வு செய்து, பின்னர் ‘Lock Chat’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம். அந்த சாட் லாக் செய்யப்பட்டு யாரும் படிக்க முடியாதபடி பாதுகாக்கப்படும்.

‘Disappearing Messages’ அம்சத்தை பயன்படுத்தலாம். இந்த அம்சமானது உங்களது சாட்டுகள் ஆட்டோமேட்டிக்காக டெலிட் ஆவதை உறுதிப்படுத்துகிறது. 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்கள் என்று எவ்வளவு நேரத்தில் உங்களுடைய மெசேஜ் டெலிட் ஆக வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

கிளவுடில் சேமிக்கப்பட்டுள்ள சாட் பேக்கப்களை என்கிரிப்ட் செய்யலாம். அவ்வாறு பேக்கப் எடுத்து வைக்கப்பட்ட தகவலை கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட உங்களுடைய அனுமதி இல்லாமல் அதனை அணுக முடியாது.

‘Silence Unknown Caller’ மற்றும் ‘Call Relay’ போன்ற அம்சங்கள் மூலம் தெரியாத மற்றும் மோசடி கால்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.