இனி.. வாட்ஸ் ஆப் புரொஃபைல் படங்களை களவாட முடியாது - அப்டேட் வசதி!
வாட்ஸ் ஆப் புதிய பாதுகாப்பு வசதி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்
வாட்ஸ்அப் தொடர்ந்து அதன் அப்ளிகேஷனில் உள்ள சாட்டுகள், இமேஜ்கள், வீடியோக்கள் மற்றும் பிற வகையான தகவல்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில் வாட்ஸ் ஆப் சமூக ஊடகத்தில் ஒருவரது புரொஃபைல் படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பது இனி தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு பயனரின் புரொஃபைல் படத்தை இதர பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது.
பாதுகாப்பு வசதி
இதனை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயற்சிப்பவருக்கு ஃபேஸ்புக் அறிவுறுத்தல் படி வாட்ஸ் ஆப்பும் வார்னிங் கொடுக்கும். 2 மாதங்களுக்கு முன்னர் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி, தற்போது ஐபோன்களுக்கான ஐஓஎஸ் பயனர்களுக்கும் அறிமுகமாகிறது.
இதையும் தாண்டி தம் புரொஃபைல் படங்களை பார்வையிட முடியாதபடி தடை செய்யும் செட்டிங்ஸ் நடைமுறைகள் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.