Whatsapp: இனி இது இலவசம் கிடையாது; பணம் கட்டனும், பரபர தகவல் - பயனாளர்கள் கலக்கம்!

WhatsApp
By Sumathi Nov 16, 2023 07:56 AM GMT
Report

வாட்ஸ்அப் பேக் அப் (chat backup) செய்ய இனி கட்டணம் செலுத்த வேண்டும்.

வாட்ஸ்அப் 

வாட்ஸ்அப் நாடு முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், சமீபத்தில் சேட் பேக் அப் வசதியில் புதிய விதிமுறைகளை அப்டேட் செய்துள்ளது.

whatsapp-chat-backup-cost

அதன் படி, கூகுள் ட்ரைவ்-ல் இனி இலவசமாக ஷேட் பேக் அப் செய்ய முடியாது. அது உங்கள் கூகுள் கணக்கு சேமிப்பகத்துடன் கணக்கிடப்படும். விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிதாக இருக்கலாம்.

வாட்ஸ்அப் அதிரடி.. ஒரே மாதத்தில் 74 லட்சம் கணக்குகள் முடக்கம் - என்ன காரணம் தெரியுமா?

வாட்ஸ்அப் அதிரடி.. ஒரே மாதத்தில் 74 லட்சம் கணக்குகள் முடக்கம் - என்ன காரணம் தெரியுமா?

 இனி கட்டணம்

ஆப்பிள் பயனர்களுக்கு ஏற்கனவே இந்த வசதி உள்ளது. ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள், டெக்ஸ்ட் மெசேஜ் உடன் மீடியா பைல்ஸ் பேக்அப் செய்யும் பயனர்கள் கூகுள் ஒன் (Google One) சந்தாவைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

whatsapp update

எனினும் இலவசமாக பேக் அப் செய்ய கூகுள் ட்ரைவ்வில் 15ஜிபி ஸ்டோரேஜை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், வாட்ஸ்அப் பயனர்களை மீடியா (புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்) இல்லாமல் குறுஞ்செய்திகளை மட்டுமே பேக் அப் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.