வாட்ஸ்அப் அதிரடி.. ஒரே மாதத்தில் 74 லட்சம் கணக்குகள் முடக்கம் - என்ன காரணம் தெரியுமா?

WhatsApp India
By Vinothini Oct 03, 2023 06:57 AM GMT
Report

இந்தியாவில் மட்டும் 74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணக்குகள் முடக்கம்

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு புதிய விதிமுறைகளை கொண்டுவந்தது. அந்த விதிகளின்படி இந்தியாவில் பலரது வாட்ஸ்அப் கணக்குகளை தடைசெய்தது. இதில் இந்தியாவில் மட்டும், சுமார் 3,506,905 கணக்குகள், பயனர்களிடமிருந்து எந்தவித புகாரும் வருவதற்கு முன்பாகவே தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp-banned-74-lakhs-people-account

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில், "தவறுகளை தடுப்பதிலும் அதை எதிர்த்து போராடும் விதமாகவும் நாங்கள் எங்கள் சேவைகளை வழங்கி வருகின்றோம்.

எங்கள் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு கூடுதலாக, பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தில் நிபுணர்கள் அடங்கிய குழுவை நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்று கூறியுள்ளது.

ஸ்கூல் பெஞ்சில் தாளம் போட்ட அரசு பள்ளி மாணவர்கள் - இணையத்தை கலக்கும் கல்வி அமைச்சரின் பதிவு!

ஸ்கூல் பெஞ்சில் தாளம் போட்ட அரசு பள்ளி மாணவர்கள் - இணையத்தை கலக்கும் கல்வி அமைச்சரின் பதிவு!

வாட்ஸ்அப் நிறுவனம்

இதனை தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம் "இந்த பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட, பயனர்களின் புகார் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எங்கள் தளத்தில் துஷ்பிரயோகத்தை எதிர்த்து போரிடும் வாட்ஸ்அப்பின் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன" என்று தெரிவித்தது.

whatsapp-banned-74-lakhs-people-account

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு குறைகள் மேல்முறையீட்டுக் குழு (GAC) பொறிமுறையை அறிமுகப்படுத்தியது, இதில் பயனர்கள் தங்கள் புகார்களை ஒரு புதிய போர்ட்டலில் அளிப்பதன் மூலம் சமூக ஊடக தளங்களின் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது. தற்பொழுது, வாட்ஸ்அப் அதன் பயன்பாட்டின் சில மாற்றங்களை செய்துவருகிறது.