ஸ்கூல் பெஞ்சில் தாளம் போட்ட அரசு பள்ளி மாணவர்கள் - இணையத்தை கலக்கும் கல்வி அமைச்சரின் பதிவு!
பள்ளி மாணவர்கள் ஸ்கூல் பெஞ்சில் தாளம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தாளம் போட்ட மாணவர்கள்
கேரள மாநிலம், திருவாங்கூர் அரசு பள்ளியில் பயின்று வரும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து ஸ்கூல் பெஞ்சில் தாளம் போட்டனர். அவை பேனா, பென்சில்கள் கொண்டு தாளம் போட்டு தங்களது கலைத்திறமையை வெளிபடுத்தினர்.
இதனை அவ்வழியாக வந்த ஆசிரியர் ஒருவர் தனது போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். திறமை எதுவாக இருந்தாலும் அதனை ஆதரிப்பதற்கு, பாராட்டுவதற்கும் நல்ல மனது வேண்டும்.
இந்நிலையில், தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.