வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட் எடுக்கும் புதிய வசதி - இன்று முதல் அறிமுகம்!
சென்னையில் மெட்ரோ டிக்கெட்டுகள் வாட்ஸ்அப் மூலம் எடுத்துக்கொள்ளும் வசதி இன்று முதல் அறிமுகமாகியுள்ளது.
மெட்ரோ ரயில்
சாலைகளில் போக்குவரத்து நெரிசைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மெட்ரோ இரயில் சேவை செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக ஸ்மாட்ஃபோனில் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அது இன்று முதல் அறிமுகமாகிறது, இனி மெட்ரோ நிலையத்திற்கு செல்லாமலே டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் எடுத்துக்கொள்ளலாம்.
புதிய வசதி
இதனை தொடர்ந்து, அறிமுகம் செய்துள்ள 83000 86000 என்ற பொது எண்ணை பயணிகள் தனது மொபைலில் பதிவு செய்துகொண்டு, அதன் வாயிலாக வாட்ஸ்அப் மூலம் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து டிக்கெட் எடுக்கலாம்.
வாட்ஸ்ஆப்பே, ஜீபே, நெட்பேங்கிங் ஆகியவை வாயிலாக கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.
வீட்டில் இருந்து புறப்படும்போது டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணம் முடியும்போது, கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து வெளியே செல்லலாம்.
இந்த வசதி தற்போது திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகமாகி உள்ளது.