அமெரிக்காவிற்கு சவால்; இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ - பிரதமர் மோடி திறப்பு
இந்தியாவிலேயே முதல் வாட்டர் மெட்ரோவை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
வாட்டர் மெட்ரோ
கேரளா மாநிலத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது கொச்சி. இது முக்கியமான இடம் என்பதால், இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு மெட்ரோ ரயில், துறைமுகம், விமான நிலையம் போன்ற பல வசதிகள் உள்ளன. இந்நிலையில், இன்று இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திறக்கப்படுகிறது.
இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இது 11 தீவுகளை இணைக்கும் வகையில் ரூ.747 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், சுற்றுலா படகுகள் சோதனை முடிந்து 9 படகுகள் தயார் நிலையில் உள்ளது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம்.
மோடி திறப்பு
இதில் குறைந்த கட்டணம் ரூ 20, அதிக கட்டணம் ரூ 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. இந்த கப்பலில் கழிப்பிடம், குளிர்சாதன வசதி, உணவு உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.
இந்த படகில் பயணம் செய்ய வாராந்திர பாஸுக்கு 180 ரூபாயும், மாதாந்திர பாஸுக்கு ரூ 600 கட்டணமும், 3 மாதங்களுக்கு ரூ 1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை Kochi One செயலி மூலமும் டிஜிட்டல் வழியாக படகில் பயணம் செய்ய கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அமெரிக்காவில், கப்பல் போக்குவரத்தில் சுமார் 700 கப்பல்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்தியாவில் முதல் முறையாக இத்துறையில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.