மெட்ரோ: சரிந்து விழுந்த தூண் - பைக்கில் சென்ற தாய், மகன் பலி!
மெட்ரோ பணியின்போது தூண் சரிந்து விழுந்ததில் சாலையில் பைக்கில் சென்ற தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெட்ரோ பணி
பெங்களூர், நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. அதில், கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் சென்ற கணவர், மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரிதாப பலி
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தாய் மற்றும் 2 வயது மகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், சாலையில் கிடந்த இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
