560 சடலங்களின் உடல் உறுப்புகளை வெட்டி விற்ற தாய், மகன் - திடுக்கிடும் சம்பவம்!
இறுதிச் சடங்கிற்கு வரும் உடல்களை திருடி அதை வெளியே விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
உடல் உறுப்பு விற்பனை
அமெரிக்கா, கொலராடோவைச் சேர்ந்தவர் மேகன் ஹெஸ்(46). இவர், மாண்ட்ரோஸில் சன்செட் என்ற இறுதிச் சடங்கு செய்யும் பிசினஸையும் டோனர் சர்வீசஸ் என்ற உடல் உறுப்பு தான மையத்தையும் நடத்தி வந்தார். இவரது தாய் ஷெர்லி கோச்சும்(69) பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், ராய்ச்சி அல்லது கல்வியில் பயன்படுத்துவதற்கு தலைகள், கைகள் மற்றும் முதுகெலும்புகள் போன்ற உடல் பாகங்களை விற்பது கூட்டாட்சி சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. இதைப்பயன்படுத்தி மேகன் ஹெஸ் இந்த உடல் பாக விற்பனையை செய்துள்ளார்.
தாய், மகன் கைது
அதோடு போலி ஆவணங்கள் மூலம் தனமாக உறுப்புகளை விற்றுள்ளார். தொடர்ந்து, கால்கள், தலைகள் மற்றும் உடற்பகுதிகளை வாங்கிய அறுவைசிகிச்சை பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அவை மோசடியாகப் பெறப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், குடும்பங்களிடம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்று பொய் சொல்லி அவர்களது உடலை வெட்டி விற்றுள்ளார். அதற்கு பதிலாக வேறு உடலின் சாம்பலை வழங்கியுள்ளதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மேகன் ஹெஸ் மற்றும் அவரது தாயார் மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.
அதில், மேகன் ஹெஸ்ஸுக்கு 20 ஆண்டுகளுக்கும், தாய்க்கு 15 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.