திமுகவின் கூட்டணி அவசரத்திற்கு அந்த ஆப்ஷன் தான் காரணம் - ஜெயக்குமார் பேட்டி!
எங்களுக்காக பயந்து தான் திமுக அவசர அவசரமாக கூட்டணியை முடிக்கப் பார்க்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "திமுகவில் எங்களுக்காக பயந்து அவசரமாக இறுதிப்பங்கீடு வரை சென்று உடனே ஒப்பந்தம், உடனே கையெழுத்து என வெளியிடுகிறார்கள்.
தோல்வி பயம்
இதில் அவசரம் காட்ட வேண்டியதற்கான தேவை என்னவென்றால், திமுகவை விட்டால் அடுத்த ஆப்ஷன் அதிமுகவிற்கு போய்விடுவார்கள். அந்த ஆப்ஷன் எந்த கட்சிக்கும் வரக்கூடாது என்ற அடிப்படையில் பயந்து காலில் விழாத குறையாக கெஞ்சி இன்று அவசர அவசரமாக கூட்டணியை முடிக்கப் பார்க்கிறார்கள்.

இது அவர்களின் தோல்வி பயம் அல்லது எங்கள் மீதுள்ள அச்சத்தால் நிகழும் அவசரத் தன்மையை காட்டுகிறது. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் 'கத்திரிக்காய் மலிந்தால் கடைத் தெருவுக்கு தான் வந்து தான் ஆக வேண்டும்' என்பதுபோல் யார் யார் எங்கெங்கு ஜம்ப் பண்ணி எங்கெங்கே போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் பத்து நாட்களில் தெரிந்துவிடும்" என்றார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil