நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா அண்ணாமலை? அவரே அளித்த விளக்கம் இதுதான்!
கட்சி தலைமை உத்தரவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
இதற்கிடையில் கரூர் அல்லது கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
விளக்கம்
அதற்கு விளக்கம் அளித்த அவர் "கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். கட்சி தலைமை உத்தரவிட்டால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.
பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன். கட்சி தலைமையின் முடிவே எனது முடிவு. எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.