உலகிலேயே ஆடம்பரமாக நடந்த திருமணம் எது தெரியுமா? ஆச்சர்ய தகவல்!
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த திருமண நிகழ்ச்சி குறித்து பார்ப்போம்.
ஆடம்பர திருமணம்
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த திருமண நிகழ்ச்சி என்பது பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடந்துள்ளது. அது இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம்தான்..
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இவர்களது ஆடம்பர திருமணத்திற்கு 110 மில்லியன் டாலர்(914 கோடி) செலவாகியுள்ளது. அன்றைய காலகட்டத்தில் சுமார் 3 கோடி பேர் இந்த திருமண நிகழ்ச்சியை நேரலையில் பார்த்துள்ளனர். திருமணத்தின்போது சுமார் 3,000க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளனர்.
சார்லஸ் - டயானா
இதில், விலை உயர்ந்த வைரம் மற்றும் தங்க நகைகள், அரிய வகை கடிகாரங்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் என ஏராளமான பரிசுகள் அடங்கும். திருமண விழாவில் 250 இசைக் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்றதோடு, 1,400 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், சார்லஸ் - டயானா இருவரும் விவாகரத்து செய்தனர். பின்னர் மோசமான கார் விபத்து ஒன்றில் இளவரசி டயானா உயிரிழந்தார்.
இந்தியாவில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோரின் திருமணம் மிகவும் அதிக பொருட்செலவில் ஆடம்பரமாக நடைபெற்ற திருமணங்களில் ஒன்றாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.