நீடா அம்பானியின் கலாச்சார மையம் - அப்படியென்ன அங்க ஸ்பெஷல்!
நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா நடைபெற்றது.
நீடா அம்பானி
மகாராஷ்டிரா, மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில் நீடா முகேஷ் அம்பானியின் கல்சுரல் சென்டரின் பிரமாண்டமான திறப்பு விழா நடைபெற்றது. இது அவரது கனவுத் திட்டம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரான நீடா முகேஷ்,
இந்த கலாச்சார மையத்தை உருவாக்கியிருப்பது ஒரு புனித பயணம் போன்றது. சினிமா, இசை, நடனம், நாடகம், இலக்கியம், கைவினைப் பொருட்கள், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவை சார்ந்து இயங்க ஒரு இடமாகவும், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு இடமாகவும் இதனை உருவாக்க எங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
கலாச்சார மையம்
இது இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார். அமெரிக்க ஐரோப்ப நாடுகளைப் போல இந்தியாவில் இந்திய கலைஞர்களுக்கு உலக அளவில் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க இந்த மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இங்கே 2000 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட திரையரங்கம் உள்ளது. குழந்தைகள், மாணவ, மாணவியர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. இந்த மையம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கும்.
மேலும் இந்தியாவின் நீண்ட கலாச்சாரத்தின் மீது கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கலைஞருக்கு பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான வழியை உருவாக்குகிறது.
இந்த விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், திரைத்துறை பிரபலங்கள் ஆமிர் கான், ஆலியா பட், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.