இஷா அம்பானியின் பிரம்மாண்ட பங்களாவை வாங்கிய 'பேட்மேன்' நடிகர் - விலை தெரியுமா?

Jiyath
in பிரபலங்கள்Report this article
இஷா அம்பானியின் பங்களாவை ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பென் அஃப்லெக்
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் பென் அஃப்லெக். இவர் பியர்ல் ஹார்பர், ஆர்கோ, கான் கேர்ள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், டிசி காமிக்ஸ் படங்களில் பேட்மேனாக நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவருக்கு சொந்தமான ஒரு சொகுசு பங்களா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது.
ரூ.496 கோடி
இந்த பங்களாவை பென் அஃப்லெக் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சொகுசு பங்களாவின் மதிப்பு ரூ.496 கோடி என்று கூறப்படுகிறது. சுமார் 5.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பங்களாவில் 12 படுக்கை அறைகள், 24 குளியல் அறைகள், ஜிம், உள்ளரங்கு விளையாட்டு மைதானம், சலூன், ஸ்பா ஆகியவை உள்ளன.
இந்த பங்களா இஷா அம்பானிக்கு மிகவும் நெருக்கமானதாகும். அவர் கர்ப்பமாக இருந்தபோது பெரும்பகுதியை இங்கு செலவிட்டார். 2022-ல் கிருஷ்ணா, ஆதித்யா ஆகிய இரட்டைக் குழந்தைகளை இஷா பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.