வயது அதிகரிக்க அதிகரிக்க விந்தணுவில்.. திருமணமான ஆண்களே உஷார்!
ஆண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க விந்தணுவில் மரபணு மாற்றம் ஏற்படுகிறது.
விந்தணு
திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஒரு பெண்ணின் வயது மட்டுமே மிக முக்கியம் எனக் கூறுகின்றனர்.ஆனால் ஆண்களுக்கும் அது போன்ற வரையறை கிடையாது எனக் கருத்து பகிரப்பட்டு வருகிறது.ஆனால் அது முற்றிலும் தவறானது.
இது குறித்து Maturitas இதழ் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் ஆண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க விந்தணுவில் மரபணு மாற்றம் ஏற்படுவதாகவும் , விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் வயதுக்கு ஏற்ப குறைந்து வருவதாகக் கூறப்பட்டு உள்ளது.
மரபணு மாற்றம்
இதனால் விந்தணு டிஎன்ஏ சேதமடைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஆண்கள் தந்தையாகும் வாய்ப்பு பல மடங்கு குறைவு . அதுமட்டுமில்லாமல் 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சனை , ஆரோக்கிய கோளாறு , இதய பிரச்சனை உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு அதிகம் .
25 முதல் 30 வயது வரை ஆண்கள் தந்தையாக மாறுவதற்கு ஏற்றது. விந்தணுக்கள் சுறுசுறுப்பாக இருக்கும் போதே குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.