Night Shif வேலை பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு அதிகரிப்பு -வெளியான அதிர்ச்சி தகவல்!
நைட் ஷிஃப்ட் வேலை மற்றும் அதிக மன அழுத்தத்தால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நைட் ஷிஃப்ட் வேலை
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் திருமணத்தை விட தங்களுடைய வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் பலர் இரவு நேரங்களில் கூடுதல் வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் திருமணத்தைத் தாமதமாகச் செய்து கொள்கின்றனர்.
பொதுவாக மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு ஹார்மோன்கள் உடலில் போதிய அளவு இருக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிப்பது புரோஜெஸ்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோனும் தான்.
ஆண்களின் உடலில் சுரக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் ஆண்களின் ஆண்மையை வெளிப்படுத்தும். குறிப்பாக இந்த டெஸ்டோஸ்டிரோன் தான் பாலுணர்ச்சியைத் தூண்டும். ஆனால் இவை ஒரு ஆணின் உடலில் குறைய ஆரம்பித்தால்,ஆண்மைக் குறைவு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆண்மைக் குறைவு
இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக மன அழுத்தத்தை உண்டாக்கும் வேலை, அதிக நேரம் வேலை செய்வது, குறைவான உடல் இயக்கம் ஆகியவை அனைத்தும் ஆண் பெண் இருவருக்குமே கருத்தரித்தலில் பிரச்சனையை உண்டாக்குவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ,இரவு தாமதமாகத் தூங்குவது மட்டுமில்லாமல் காபி, மது, போதைப் பொருட்கள் ஆகியவையால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து பல்வேறு வித பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது 20-30% ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அசாதாரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு விந்தணுக்கள் எண்ணிக்கையில் குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, அதிக மனஅழுத்தம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.